
தாம்பரம் அருகே நண்பர்களுடன் மது அருந்திய இளைஞர் நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு.
சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் அர்ஜூன் (36) தற்போது வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார்.
நேற்று இரவு தனது நண்பர் வீட்டின் இரண்டாவது தளத்தின் மொட்டை மாடியில் நான்கு பேருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
நண்பர்கள் மது அருந்திவிட்டு அவரவர் வீட்டிற்க்கு சென்ற நிலையில் நிலைதடுமாறிய அர்ஜூன் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார் அப்போது அவ்வழியாக வந்தவர்கள் அர்ஜூன் கீழே ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டவர்கள் உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பீர்கன்காரனை போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.