
200 ஆண்டுகள் பழமையான குரோம்பேட்டை அமல அன்னை ஆலைய தேர் திருவிழா, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அமல அன்னை தேர் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது.
சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் அமைத்துள்ள 200 ஆண்டுகள் பழமையான அமல அன்னை ஆலையத்தில் தேர் திருவிழா இன்று நடை பெற்றது.
முன்னதாக அருள் முனைவர் பிரன்சிஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நடைபெற்ற நிலையில் திரளானவர்கள் முன்னிலையில் வண்ண வண்ண மலர்களால் அளங்காரம் செய்யப்பட்ட அமல அன்னையின் திருத்தேர் ஆலையத்தில் இருந்து புறப்பட்டு ஜி.எஸ்.டி சாலை வழியாக சென்று குரோம்பேட்டை சி.எல்.சி சாலை, நியூகாலணி ஆகிய பகுதியில் பவனி வந்தது.
தேர் திருவிழாவையொட்டி அமல அன்னை ஆலையம் வண்ண விளக்குகளால் அளங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட சுற்றுவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமுகத்தினர் இந்த தேர் திருவிழாவில் பங்கேற்றதால் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையே விழாகோலமாக காட்சியளித்தது.
இந்த அமல அன்னை ஆலையத்தில் அயிரம் கிலோ மரங்களால் செய்யப்பட்ட ஜெபமாலை முன்பாக கிறிதவர்வர் பிராத்தனை செய்தால் நினைத்தது நிறைவேறும் என்றும் திருமணம் நடைபெற வேண்டி இளம் பெண்கள், இளைஞர் வேண்டினால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 24 மணி நேரமும் பிராத்தனை செய்ய ஆலையம் திறந்து இருப்பது வழக்கம்.