தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மருமகனான சபரீசன் கள நிலவரத்தை அறிந்துக் கொள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நேரில் சென்று ஆராய்ந்து வருகிறாராம்.

முதற்கட்டமாக கொங்கு மண்டலத்தில் ஆய்வு செய்து வரும் அவர், தேர்தல் வேலைகள், கூட்டணி கட்சிக்குள் ஒத்துழைப்பு எப்படி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகிறாராம். மேலும் சில முக்கிய தொகுதிகளுக்கு சென்று கள ஆய்வும் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.