
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் மண்டலத்தில் தண்ணீர் தொட்டிற்க்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த பெயிண்டர் 25 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் பிரகாஷ் (45)தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்க்கு உட்பட்ட திருமலை நகரில் உள்ள மாநகராட்சி தண்ணீர் தொட்டிற்க்கு வர்ணம் பூசும் பணியில் இருந்தவர் உணவு அருந்துவதற்காக படிக்கட்டில் இருந்து இறங்க முயன்ற போது கைப்புடி சுவர் இடிந்து விழுந்ததில் நிலைதடுமாறி 25 அடி உயரத்தில் இருந்து விழுந்தவர் தலையில் பலத்த காயமடைந்தார்.
இதனை கண்ட சக ஊழியர்கள் உடனடியாக பிரகாசை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிட்லப்பாக்கம் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஒப்பந்ததாரர் பிரபுவிடம் விசாரித்து வருகின்றனர்.