சிட்லபாக்கம் கக்கன் தெரு பகுதி திருப்பத்தில் பல மாதங்களாக மழை நீர் வடிகால் பகுதி சேதம் அடைந்து சாலையில் பாதி அளவுக்கு பள்ளம் விழுந்து இருந்தது. இது பற்றி ஜி.எஸ்.டி ரோடு நியுஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. தற்போது தேர்தல் வருவதையொட்டி அந்த பகுதியில் சிமெண்ட் தடுப்பு அமைத்து சரி செய்துள்ளனர். மேலும் அந்த வழியில் உள்ள சாலைகளில் குண்டு குழிகள் எல்லாம் சிமெண்ட் கலவையால் நிரப்பப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது.