இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப்‌ பொதுத்தேர்தல்‌ 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து விழிப்புணர்‌ ஏற்படுத்திடும்‌ வகையில்‌ தாம்பரம் ‌ ஜி.எஸ்‌.டி சாலை போத்தீஸ்‌ வணிக வளாகத்தில்‌ தேர்தல்‌ குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ ,செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்‌ திரு.ச.அருண்ராஜ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ பொதுமக்களுக்கு வழங்கினார்‌. உடன்‌ தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ திருமதி ஆர்‌.அழகுமீனா, இ.ஆ.ப. அவர்கள்‌, உதவி ஆட்சியர்‌ (பயிற்சி) திரு.அனந்த்குமார்சிங்‌, இ.ஆ.ப., அவர்கள்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி சுபாநந்தினி அவர்கள்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.