
பம்மல் அருகே அதிகாலையில் திடீரென மூன்று இருசக்க வாகனங்கள் மற்றும் வீட்டினுள் இருந்த பொருட்கள் தீபற்றி எரிந்ததால் பரபரப்பு.
முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை பம்மல் பகுதியை சேர்ந்தவர் சம்பந்தம் (49) நேற்று இரவு வழக்கம் போல் குடும்பத்துடன் தூங்கிகொண்டிருந்த போது இன்று அதிகாலை திடீரென வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கபட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் தீபற்றி மளமளவென எரிவதை கண்ட சம்பந்தம் அதிர்ச்சியடைந்து உடனடியாக குடும்பத்தினருடன் வெளியேறினர்கள்.
வெளியேரிய சிறிது நேரத்தில் வீட்டினுள் இருந்த எலக்ரானிக் சாதனங்கள் மற்றும் பொருட்களும் தீபற்றி எரிய தொடங்கியது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அனைக்க முயன்றும் முடியாததால் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்புதுறையினர் போராடி தீயை அனைத்தனர். இருப்பினும் இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகின.
ஏற்கனவே வீட்டின் அருகே நாய் ஒன்றை சில இளைஞர்கள் அடித்து துண்புறுத்தியதை தட்டி கேட்ட அதே குடும்பத்தை சேர்ந்த மூதாட்டியை இளைஞர்கள் கல்லால் அடித்து கொலை செய்தனர் இந்த வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில் அதே இளைஞர்கள்.
முன்விரோதம் காரணமாக தீவைத்தனரா என்கிற கோணத்தில் சங்கர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.