
வடலூரில் சத்திய ஞானசபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட தடை விதிக்க முடியாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி பாஜக வழக்கு தொடர்ந்தது. பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மிக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன் வழக்கு தொடர்ந்தார். பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.