
குரோம்பேட்டை ராதா நகர் (24வது வார்டு) வெங்கடேஸ்வரா தெருவில் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் குடிநீர் நிரப்புவதில்லை. இந்த தொட்டி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. பள்ளி மாணவர்களின் வாகனங்கள் அடிக்கடி செல்லும் இந்த பகுதியில் தண்ணீர் தொட்டியை மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என தாம்பரம் மாநகராட்சிக்கு அந்த பகுதி வாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.