
தேவையானவை: முருங்கைக்கீரை, முளைக்கீரை, தூதுவளைக் கீரை – தலா ஒரு கைப்பிடி அளவு, துவரம்பருப்பு -100 கிராம், புளி -எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி -இரண்டு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு -தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். கீரைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கீரைகளை வதக்கிக்கொள்ளவும். வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி… சாம்பார் பொடி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். இதனுடன் வதக்கிய கீரையை சேர்த்துக் கிளறி, வேகவைத்த பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும். கீரைகளை அடிக்கடி உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.