
கிழக்கு தாம்பரத்தில் பாதாளச்சாக்கடை குழாய் இணைப்பு பணியின்போது மண்சரிவு, சிக்கிய கூலி தொழிலாளயை ஜேசிபி இயந்திரம் முலம் மிக்க முயன்றபோது தலை துண்டாகிய சோகம்
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம் ஆதி நகர் காமாராஜர் தெருவில் பாதாளச்சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகாநந்தம்(30) உள்ளிட்டோர் ஜேசிபி இயந்திரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர் மறுபுரத்தில் கழிவுநிர் உட்புகுந்த நிலையி தீடீரென மண் சரிந்தது.
இதில் முருகானந்தம் சிக்கிகொண்டார், இதனால் அங்கு சகதியாக காணப்பட்டது. மேலும் சகதி சூழ்ந்த நிலையில் முருகானந்ததை மீட்க ஜேசிபி ஓட்டுனர் விஜய் என்பவர் ஜேசிபி இயந்திரம் மூலம் முயன்றார், அப்போது முருகானந்தம் தலை துண்டிக்கப்பட்டு சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது.
இதனால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் சேலையூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு 2 மணி நேரத்திற்கு பிறகு முருகானந்தம் உடலை மிட்டனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த சேலையூர் போலீசார் ஜேசிபி ஓட்டுனர் விஜய் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் அலட்சியாமக கூலி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதால் கூலி தொழிலாளி உயிரிழப்புக்கு காரணம் என அங்குள்ளவர்கள் பேசினார்கள்.