
வளசரவாக்கத்தில் தொடரும் திமுக உட்கட்சி பூசலால் நிர்வாகிகள் புலம்பல்..
வட்ட செயலாளர் வார்டு கவுன்சிலர் ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்
வளசரவாக்கம், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பாரதி இவர் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11 வது மண்டலம், 152 வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருகிறார் நேற்று வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஆரம்ப பள்ளியில் உடற்பயிற்சி கூடம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 152 வது திமுக வட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தன்னுடைய அனுமதி இல்லாமல் உடற்பயிற்சி கூடத்தை யார் கட்டியது என்று கேட்டு பாரதியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வட்ட செயலாளர் வார்டு கவுன்சிலரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்யக்கூடிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி. தொடர்ந்து வளசரவாக்கம், ராமாபுரம் பகுதியில் திமுக நிர்வாகிகள் இடையே ஏற்படும் உட்க்கட்சி பூசலால் திமுக நிர்வாகிகள் தினம் தோறும் புலம்பி வருகின்றனர்.