
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் (அடையார் ஆனந்த பவன்) பிரபல தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு தஞ்சாவூரை சேர்ந்த அருண்(30) என்பவர் சூப்பர்வைசராக பணியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ஹோட்டல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது அனகாபுத்தூர், லெட்சுமி தெரு, பாரி நகர், கிராண்ட் பிளாட்டில் வசித்து வரும் சங்கர் (55) மற்றும் அவரது மகன் அருண்குமார்(30) ஆகிய இருவரும் சாப்பிட இட்லி பார்சல் வாங்க வந்தனர். அவர்களுக்கான பார்சல் கொடுக்கப்பட்ட போது, தங்களுக்கு கூடுதலாக சாம்பார் பாக்கெட் ஒன்று வேண்டும் என்று தந்தை,மகன் இருவரும் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அந்த ஓட்ட காவலாளி வாகனத்தை எடுக்கும்படி வாடிக்கையாளர்களாக தந்தை மகனிடன் கூறியுள்ளார்.
அதனால் அங்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் ஓட்டல் மேற்பர்வையாளர் அருண் அங்கு சென்று தகறாறு தடுத்துள்ளார். அப்போது மகன் அருண்குமார் மேற்பர்வையாளர் அருணின் தலை, நெத்தி பொட்டு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் அடித்து தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம்டைந்த அருணை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோது உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவுசெய்த சங்கர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமார், அவரின் தந்தை சங்கர் ஆகியோரை கைது செய்து அங்குள்ள சிசிடிவி கேமரபதிவுகளை பார்த்து விசாரணை செய்துவருகிறார்கள்.
தஞ்சாவுரை சேர்ந்த அருண் பெற்றோர்கள் ஊரில் உள்ள நிலையில் சென்னைக்கு பிழைப்பு தேடிவந்து, அதே உடன் பணிசெய்த பவித்ரா என்கிற பெண்ணை காதலித்து ஒராண்டு முன்பாக திருமணம் செய்து பொழிச்சலூர் பகுதியில் வாழ்ந்துவந்த நிலையில் பணியில் ஈடுபட்ட போதே சாம்பார் பிரச்சனையில் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.