
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர்கள் வழங்கினார். இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, பி.ஆர்.நடராசன், கே.சண்முகசுந்தரம், அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.