
நங்கநல்லூரில் உள்ள கோவிலை 5 அடி உயரத்திற்கு ஜாக்கி மூலம் தூக்கி நிறுத்தும் பணியின்போது கோவில் சரிந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய நபர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உண்மையை மறைத்து லேசான காயம் என போலீசாருக்கு தகவல் அளித்த கோவில் நிர்வாகியிடம் போலீசார் விசாரணை
சென்னை நங்கநல்லுார், ராம்நகரில் உத்தர குருவாயூரப்பன் கோவில் உள்ளது. இந்த கோயில் சாலையை விட மிகவும் தாழ்ந்து காணப்படுவதால் மழைகாலங்களில் நீர் உட்புகுந்து பெரும் பாதிப்பை ஏற்பட்டது. இதனையடுத்து புதிய தொழில்நுட்ப முறையில் கோவிலை ஜாக்கி மூலம் தூக்கி நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு இந்த பணி தொடங்கியது. கர்ப்பக்கிரஹகம் உள் சன்னதி அனைத்தும், தரை மட்டத்தில் இருந்து ஐந்து அடி உயரம் உயர்த்தப்பட்டது.
கட்டுமானப் பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில் மண்டபத்தில் பின் பகுதியில் ஜாக்கி மூலமாக உயர்த்தி வைக்கும் பணி நேற்று நடந்தது.
அப்போது, எதிர்பாராத விதமாக ஜாக்கிகள் விலகி பின்புற மண்டபம் திடீரென சரிந்து கீழே விழுந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் அலறியபடி வெளியே ஒடினார்கள் இதில், வடமாநில ஊழியர் ஒருவர் மட்டும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார் பலத்த காயம் அடைந்த அவரை கோவில் நிர்வாகத்தினர் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஹரிராம் பரிதாபமாக பலியானார். இந்த விபத்து சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானவர் உத்திரபிரதேஷ் மாநிலம் கேஷ் வாரி நைனாபூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிராம் (21) என்பது தெரியவந்தது. மேலும் உரிய பாதுகாப்பு வசதி இன்றி கோவிலை தூக்கி வைக்கும் பணி நடந்தது குறித்தும் போலீசார் விசாரணண நடத்தி வருகின்றனர்.
நேற்று போலீசாருக்கு தவறான தகவல் கொடுத்த கோவில் பெண் நிர்வாகி
இடிபாடுகளுக்குள் சிக்கிய வடமாநில ஊழியர் ஹரிராம் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கோவில் நிர்வாகிகளில் ஒருவரான பெண் நிர்வாகி ஹரிராமுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சை முடிந்து தங்கும் இடத்திற்கு ஒவ்வெடுக்க சென்றுவிட்டார் என்பதை மட்டும் கூறி அனுப்பி விட்டார். ஆனால் அரசு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வந்த ஹரிராம் பலியான தகவல் நேரிடையாக வந்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணை நடத்த வந்த ஆதம்பாக்கம் காவல்நிலைய எஸ்.ஐ கோபாலிடம் உண்மையை மறைத்து லேசான காயம் என தவறான தகவல் கொடுத்தது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.