
மேற்கு தாம்பரம் குடியிருப்பு பகுதியில் துப்பாக்கி குண்டு மழை, இரண்டு நாட்களில் வழக்கறிஞர் வீடு உள்ளிட்ட பகுதியில் 6 ஏ.கே 47 துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
மேற்கு தாம்பரம் மீனம்பாள் தெருவில் உள்ள வழகறிஞர் தியாகராஜன் வீட்டில் முதல் தளத்தில் ஜன்னலை துளைத்த துப்பாக்கி குண்டு ஒன்று அறையில் உள்ள முகம் பார்க்கும் கண்ண்டாடிதை உடைத்த நிலையில் அறையில் விழுந்தது.
இந்த தகவல் அறிந்த தாம்பரம் போலீசார் மற்றும் தடய அறிவியல் துறை அதிகாரிகள் அந்த குண்டை கைப்பற்றி அதன் ரகம் குறித்து விசாரித்தபோது அது ஏ.கே-47 ரக இயந்திர துப்பாக்கி குண்டு என தெரிய வந்தது.
இதனையடுத்து சுற்றுவட்டபகுதியிலும் தீவிர தேடுதல் வேட்டையில் தனியார் அடுக்குமாடி மற்றும் வளாகத்தில் மேலும் அதே வகையை சேர்ந்த 5 குண்டுகள் கிடைத்தன.
இதனால் இந்த குண்டுகள் வந்த திசையை ஆராந்தபோது தாம்பரம் விமானப்படை பயிற்சி மைய்யம் மற்றும் குடியிருப்புகள் அருகாமையில் உள்ளதால் அங்கு பயிற்சியின் போது தவறுதலாக திசை மாறி வந்து இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணையை துவக்கியுள்ளனர்.
இது குறித்து உண்மை நிலவரம் போலீசார் விசாரணை மற்றும் விமானப்படை பயிற்சி அதிகாரிகள் விளக்கினால்தான் தெரியவரும்.
அதே நேரத்தில் எப்போதும் இல்லாத வகையில் மேற்கு தாம்பரம் பகுதியில் தொடர்ச்சியாக துப்பாக்கி குண்டுகள் விழுந்த நிகழ்வால் குடியிருப்புவாசிகளிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பீர்க்கன்காரணை பகுதியில் இதுபோல் குண்டுகள் சிலரை தாக்கிய நிகழ்வுகளும் நடந்துள்ளது. அதனால் உயர் காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.