முடிச்சூர் ஆம்னி பேருந்து நிருத்தம் ஏப்ரலில் துவக்கம். மலிவு விலை உணவகம் ஏடிஎம் மையம் விரைவில் துவக்கம். கிளாம்பாக்கத்தில் காவல் நிலைய அடிக்கல்நாட்டு விழாவில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி.

சென்னை அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ரூபாய் 14 கோடியே 35 லட்சம் மதிப்பில் புதிய காவல் நிலையம் அமைப்பதற்காக அமைச்ச சேகர்பாபு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் அடிக்கல் நாட்டி கல்வெட்டை திறந்து வைத்து பணிகளை துவக்கி வைத்தனர்.

பின்னர் பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் நேரடி பார்வையில் பேருந்து நிலைய பாதுகாப்பிற்கேற்ப போதிய முழு கட்டமைப்புடன் காவல் நிலையம் அமைக்கபடுவதாகவும், நுழைவாயிலில் 4.5. கோடி மதிப்பில் வரவேற்பு வளைவு அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் முடிச்சிரில் அமைக்கபடும் ஆம்னி பேருந்து நிருத்தம் ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்து பயண்பாட்டிற்கு வரும் என்றும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கும் கிளாம்பாக்கத்தில் சலுகை கட்டணத்தில் இடம் வழங்கபடும் என்றும் தெரிவித்தார். அதேபோல் விரைவில் மலிவு விலை உணவகம் மற்றும் ஏடிம் மையம் துவங்கபடும் என்றார்.