
சென்னையை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த்தனுஸ்ரீ, இவரது மகள் தாரகை ஆராதனா(10), மற்றும் தங்கை மகன்கள் கவி அஸ்வின்(14), நிஷ்விக்(8) ஆகிய மூவரும் கடல் மாசு தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை நீலாங்கரை கடற்கரையில் கடலில் நீந்த துவங்கி சென்னை மெரினா கடற்கரை வரை 20 கி.மீ தூரத்தை 5 மணி நேரம் 25 நிமிடங்களின் கடந்து சாதனை புரிந்தனர்.
இந்த சாதனையை அசிஸ்ட் வேல்டு ரெக்கர்ட்ஸ் நிறுவனம் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.
இதனையடுத்து கடலோர காவல் குழும எஸ்.பி அரிகரன்பிரசாத் சாதனை சிறுவர்களுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டு சான்றிதழ்களை அணிவித்தார்.
இதில் ஆராதனா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நிலாங்கரையில் இருந்து மெரினாவரை 18 கி.மீ தூரத்தை 6 மணி நேரம் 14 நிமிடத்தில் கடந்து சாதனை புரிந்த நிலையில் இந்த மூன்று சிறுவர்கள் பங்கேற்பு நீச்சல் சாதனையில் 20 கி.மீ தூரத்தை 49 நிமிடங்களுக்கு முன்பே கடந்துள்ளது பார்வையாளர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் பாராட்டுகளை தெரிவித்தனர்.