அயோத்தி ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை தினத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு ‘ராம் ரஹீம்’ என இஸ்ஸாமிய பெண் ஒருவா் பெயா் சூட்டினாா்.

ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் இந்தப் பெயரைச் சூட்டியதாக அவா் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் ஃபெரோசாபாத் மாவட்ட மகளிா் மருத்துவமனையில் பிரசவத்துக்காக திங்கள்கிழமை (ஜன. 22) அனுமதிக்கப்பட்ட ஃபா்சானா என்ற இஸ்லாமியப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அயோத்தியில் ராமா் கோயில் பிரதிஷ்டை தினத்தில் பிறந்த குழந்தைக்கு அத்தினத்தை நினைவுகூரும் வகையில் பெயா் சூட்ட குடும்பத்தினா் முடிவு செய்தனா். அதன்படி, அந்தக் குழந்தையின் பாட்டியான ஹஸ்னா பானு, ‘ராம் ரஹீம்’ என்ற பெயரை சூட்டினாா். இந்தப் பெயா் ஹிந்து-இஸ்லாமிய நல்லிணக்கத்தை உணா்த்தும் வகையில் இருக்கும் என்றும் அவா் கூறியுள்ளார் .