
மேற்குதாம்பரம் கண்ணன் அவன்யூவில் அமைந்துள்ள ஸ்ரீகாளிகாம்பாள் கோயில் கருவரை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை கருகல்லில் அமைத்த நிலையில் இன்று திரு குடமுழுக்கு நடைபெற்றது.
முன்னதாக இரண்டு நாட்களாக முன்றுகால யாகசாலை பூஜைகள் பூர்ணாதி நடைபெற்ற நிலையில் புனித கலசநீரை மேளம் தாளம் முழங்க கோயில் கோபுரத்திற்கு கொண்டு சென்று திரு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் தாம்பரம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டதை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து கருகல்லால் ஆன கற்பகிருகத்தில் ஸ்ரீகாளிகாம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
மேலும் 48நாட்களுக்கு தொடர்ச்சியாக மண்டல பூஜைகள் நடைபெறும் என ஆலைய நிர்வாக குழுவினர் தெரிவித்தனர்.