பல்வேறு நிறுவனங்களுடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்‌ மேற்கொள்ளப்பட்டு, நிறுவனங்களின்‌ முடிவுற்ற திட்டப்‌ பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்‌ பணிகளுக்கு அடிக்கல்‌ நாட்டி சிறப்புரையாற்றினார்‌. இவ்விழாவில்‌, இங்கிலாந்து நாட்டு இணை அமைச்சர்‌ லார்டு தாரிக்‌ அகமது, குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன்‌, தொழில்‌, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்‌ வர்த்தகத்‌ துறை அமைச்சர்‌ டி.ஆர்‌.பி. ராஜா, அமைச்சர்‌ பெருபக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மினா, தொழில்‌, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்‌ வர்த்தகத்‌ துறை செயலாளர்‌ அருண்‌ ராய்‌, குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை செயலாளர்‌ அர்ச்சனா பட்நாயக்‌, மகேந்திரா குழுமத்‌ தலைவர்‌ ஆனந்த்‌ மகேந்திரா, TAFE நிறுவனத்தின்‌ தலைவர்‌ மல்லிகா சீனிவாசன்‌, செயின்ட்‌ கோபின்‌ நிறுவனத்தின்‌ முதன்மை செயல்‌ அலுவலர்‌ மற்றும்‌ மேலாண்மை இயக்குநர்‌ பி.சந்தானம்‌, டாடா பவர்‌ நிறுவனத்தின்‌ மேலாண்மை இயக்குநர்‌ பிரவீர்‌ சின்ஹா, Pou Chen சென்‌ நிறுவனத்தின்‌ துணைத்‌ தலைவர்‌ Mr.Qinxue Lee, ராம்கோ நிறுவனத்தின்‌ மேலாண்மை இயக்குநர்‌ பி.ஆர்‌.வெங்கட்ராம ராஜா, CII தமிழ்நாடு தலைவர்‌ சங்கர்‌ வானவராயர்‌, அயல்நாட்டுத்‌ தூதரக அதிகாரிகள்‌, பல்வேறு முன்னணி தொழில்‌ நிறுவனங்களின்‌ நிர்வாகிகள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.