தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை விதிக்க கோரி முறையிட்டுள்ளார். வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது. வழக்கை அவசர வழக்காக உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் வழக்கறிஞர். போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பது சட்டவிரோதம். நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க கூடாது; அமலாக்கத்துறை பதில் மனு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க கூடாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஜாமின் மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி.
திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் என அறிவிப்பு.
நாளை அரசுப் பேருந்துகள் இயங்கும் – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை கொண்டு நாளை பேருந்துகள் இயக்கப்படும்.
போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் 2 கோரிக்கைகள் ஏற்பு. மேலும் 4 கோரிக்கைகள் குறித்து பொங்கலுக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளோம்
- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.