சென்னை மண்ணிவாக்கம் ராசாத்தி கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் வயது 44 இவரது மனைவி கஸ்தூரி, இவர்களுக்கு ஜீவனா என்ற 17 வயது மகளும், ரோஷன் 14 வயது மகனும் உள்ளனர்.

வினோத்குமார் ஓட்டேரியிலுள்ள ஐந்தாவது பிரதான சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு அருகில் உள்ள பேக்கரி கடைக்கு சென்று உணவுப்பொருட்கள் வாங்கி கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் வினோத் குமாரை தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

இதனால் ரத்த வெள்ளத்தில் வினோத் குமார் உயிரழ்ந்தார் தகவல் அறிந்து வந்த ஓட்டேரி போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சிலம்பு என்கிற சிலம்பரசன் மாமூல் கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொலைபேசி மூலம் மிரட்டியாக வினோத்குமார் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் கைது செய்யபட்டார்.

பின்பு வெளியே வந்த சிலம்பரசன் கார் திருட்டில் ஈடுபட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடலூர் சிறையில் அடைக்கபட்டுள்ளார்.

மேலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிலம்பரசன் ஆதரவாளர்கள் சிலர் வினோத்குமாரிடம் அளித்த புகாரை திருப்பி பெற வேண்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூற்படும் நிலையில் சந்தேக அடிப்படையில் சிலம்பரசனிடம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.