தலை நிமிருமா தமிழக காங்கிரஸ்
எம்.பி.,யின் அவமதிப்பு பேச்சு
கரன்ஸி வசூலில் கவனம் செலுத்தும் காங்கிரஸ்
அதிர்ச்சியில் நிர்வாகிகள்
காங்கிரஸ்
‘ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் தோல்வியடையாமல் இருந்திருந்தால், அக்கட்சிக்கு தலைக்கனம் ஏற்பட்டிருக்கக் கூடும்’ என தர்மபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார் பேசியதற்கு, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்
பலரும் அதிருப்தியில் திணறிக் கொண்டிருக்கின்ற்
இது குறித்து, தமிழக காங்கிரஸ் அதிருப்தி நிர்வாகிகள் கூறியபோது
‘இண்டியா’ கூட்டணியை ஒருங்கிணைத்து, அதை பா.ஜ., வுக்கு எதிரான வலுவான கூட்டணியாக்க வேண்டும் என்பதில், முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக செயல்படுகிறார்.
ஆனால், அக்கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களிடம், அந்த தீவிரம் இல்லை. அவர்கள் காங்கிரஸ் கட்சியை இஷ்டத்திற்கு விமர்சித்து, வாய்க்கு வந்ததை பேசி வருகின்றனர்.இதற்கு நேரடியாக பதிலடி கொடுக்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இல்லை.
தி.மு.க.,வுக்கு தனி கொள்கைகள் இருக்கலாம். ஆனால், தேசிய அளவில் ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில், மற்ற கட்சிகளின் கொள்கை களோடு இணைந்து, அரசியல் செய்ய வேண்டும்.
அமைச்சர் உதயநிதி, ஹிந்துத்துவாவை கொச்சைப்படுத்துவதாக நினைத்து, சனாதனத்தை ஒழிப்போம் என பேசினார். இதனால், ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், மூன்று மாநிலங்களில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
சமீபத்தில், தருமபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமாரும், ‘கோ மூத்திரா’ என வட மாநில மக்களை கொச்சைப்படுத்துவது போல பார்லிமென்டில் பேசினார். அதை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கடுமையாக எதிர்த்த பின், செந்தில்குமார் மன்னிப்பு கோரினார்.
சில நாட்கள் அமைதியாக இருந்த செந்தில்குமார், தற்போது காங்கிரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கிறார். சமாஜ்வாடி, கம்யூ., போன்ற கட்சிகளை 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் அரவணைத்திருக்க வேண்டும் என சொல்கிறார்.
கூட்டணி என, வரும்போது, அனைத்து தரப்பிலும் அரவணைப்பும், அனுசரணையும் இருக்க வேண்டும். அப்போது தான் கூட்டணி நிலைக்கும்; எதிர்பார்த்த பலன் கிட்டும்.
அதை விடுத்து, காங்கிரசை ஆளாளுக்கு விமர்சிப்பதும், காங்கிரசை சிறுமைப்படுத்துவது போல செய்வதையும் ஒருநாளும் தமிழக காங்கிரசார் ஏற்று கொள்ளமாட்டார்கள்.
காங்கிரஸ் தோல்விக்கு சனாதன பேச்சு தான் காரணம் என்பதை மடைமாற்றம் செய்வது போல, வெற்றி பெற்றிருந்தால் காங்கிரசுக்கு தலைக்கனம் ஏற்பட்டிருக்கக்கூடும் என, செந்தில்குமார் பேசியது அதிகபிரசங்கிதனம்.
எதிர்கட்சியாக இருந்த தி.மு.க., ஆளுங்கட்சியாக மாறி உடனே தலைகனம் ஏறி விட்டது என, காங்கிரஸ் சொன்னால் செந்தில்குமார் ஏற்று கொள்வாரா? ஆணவத்தின் உச்சத்தில் இருந்து கொண்டு செந்தில்குமார் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் நேரடியாக திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் இல்லாதது தமிழக காங்கிரசார் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தநிலையில் தமிழகத்தில் காங்கிரசார் தனித்து களம்காணும் நிலை உருவாகாவிட்டால் காங்கிரசார் தேர்தல் களத்தில் படுகுழியில் தள்ளப்படுவார்கள் என்கின்றனர் அதிருப்தி நிர்வாகிகள்.
இதனிடையே
ரோஷம் இருந்தால் திமுக வுடன் கூட்டணி யை முறித்துக் கொள்ளுங்கள் பார்க்கலாம் என்கின்றனர் திமுகவினர்.
இதற்குபதிலடியாக
மோடி காப்பாற்றிவிடுவார் என்ற நப்பாசையில் இந்தியக்கூட்டணிக்கே வேட்டு வைக்குமளவுக்கு திமுக தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மோடியும் காப்பாற்ற மாட்டார் – திராவிடமும் அழிந்து போகும் என்பது இதுகளுக்கு தெரியாதது துரதிஷ்ட வசமானது என்கின்றனர்.
இதற்கு பதிலடியாக
செந்திலுக்கு இந்த முறை சீட் கிடையாது. ஆகையால் அவர் என்ன வேண்டுமானாலும் பேசுவார்.கையேந்தும் காங்கிரஸ் பொங்கக்கூடாது.கிடைத்ததை வைத்து வாழ்க கோசம் போடவேண்டும்.
இப்படி திமுக காங்கிரஸ் நிர்வாகிகளிடையே மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் கூட்டணி தொடர்ந்தால் நிலமை என்னவாகும் என்பதை காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவை பொறுத்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் தொடரலாம் இல்லையேல் சிக்கல்தான் என்கின்றனர்.
இந்த நிலையில்
காங்கிரஸ் கட்சியின், 138வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில்,
காங்கிரஸ் கட்சியின் ஆன்லைன் நன்கொடைக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் கோடி ரூபாய் வரை அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாவட்ட தலைவர்களில் சிலர், வெறும் 138 ரூபாய் மட்டும் அனுப்பியிருப்பதால், நன்கொடை வசூல் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
‘தேசத்திற்கான நன்கொடை என்ற ஆன்லைன் கிரவுட் பண்டிங் திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது.
கட்சியை பலப்படுத்துவதற்காக, 138 ரூபாய், 1,380 ரூபாய், 13,800 ரூபாய் தொகையை, காங்கிரஸ் கணக்கில் டிபாசிட் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்கொடைகளுக்காக, இரண்டு ஆன்லைன் இணைப்புகளை உருவாக்கி, அவற்றை மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுக்கு அனுப்பி வசூலிக்கும் பணியை, தமிழக காங்கிரஸ் துவக்கி உள்ளது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக கூட்டம் நடந்தது.
அதில், 75 மாவட்ட தலைவர்களிடம் நன்கொடை அனுப்பும் திட்டம் குறித்து, அழகிரி விளக்கி பேசினார்.
ஆனால், சில மாவட்ட தலைவர்கள் வெறும், 138 ரூபாய் அனுப்பி வைத்துள்ளனர்.
அவர்களிடம், ‘ஏன் பணம் குறைவாக அனுப்பியுள்ளீர்கள்?’ என மாநில நிர்வாகிகள் கேட்டதற்கு, ‘பணம் சரியாக சேர்ந்து விட்டதா என்பதை அறிவதற்காக, குறைந்த தொகை அனுப்பி வைத்தோம்’ என, காரணம் கூறி அதிருப்தியை வெளிக்காட்டாமல் சமாளித்துள்ளனர்.
அதேநேரம்
காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மேயர், துணை மேயர், கவுன்சிலர்களிடம், 1.38 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டும் என, மாவட்ட தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 18 எம்.எல்.ஏ.,க்களில் ஒரு சிலர், 13,800 ரூபாய் அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால், நன்கொடை வசூலில் விறுவிறுப்பு இல்லாமல் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ‘வார்ரூம்’ அமைக்கப்பட்டு, அதில் எட்டு பெண், 14 ஆண் என, 22 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா, நான்கு மாவட்டங்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. நன்கொடை வசூல் தொகை விபரத்தை தினமும் வார்ரூமுக்கு தெரிவிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது . கட்சி வளருதோ இல்லையோ நிதி வசூலில் கவனம் செலுத்துகின்றனர் தமிழக காங்கிரசார்
புயல் மழையில் தமிழகத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரம் அழிந்து கஷ்டப்படும் அவல நிலையில் அரசியல் கட்சிகள் முதல் தனிமனிதர்கள் வரை பலரும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டுள்ளனர் இந்த நேரத்தில் திமுகவுக்கு காவடி தூக்கிக் கொண்டிருக்கும் காங்கிரசோ கட்சிக்கு நிதி வசூலிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது இது தமிழக மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
என்னத்த சொல்ல.