தாம்பரம் அருகே நிவாரண தொகை வழங்க கோரி அரசு ஊழியர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

எம்.எல்.ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு உரிய நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதியளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கபடடவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கபடும் என்று முதலமைச்சர் அறிவித்ததை நேற்று முதல் சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவடங்களில் நேற்று முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நிவாரண தொகையை வழங்குவதற்க்கு சில கட்டுவாடுகளை அதாவது அரசாங்க ஊழியர்கள்,ஜி.எஸ்.டி செலுத்துபவர்கள்,வருமான வரி செலுத்துபவர்களை தவிர மற்றவர்களுக்கு வழங்கபடும் என்று அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பி.டி.சி காலணியில் வசித்து வரும் அரசு ஊழியர்களின் குடுப்பத்தை சேர்ந்த பெண்கள் பெருவெள்ளத்தால் பெரிதாக பாதிக்கப்பட்டு தங்களின் உடமைகளை இழந்துள்ளதால் தங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் மணிமங்கலம் உதவி ஆணையர் ரவி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் தங்களின் விவரங்களை எம்.எல்.ஏ செல்வபெருந்தகையிடம் வழங்கி நிவாரணம் குறித்து ஏற்பாடு செய்யபடும் என்று உறுதியளித்ததால் கலைந்து சென்றனர்.