
பாஜகவை தோற்கடித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் நினைத்துக்கொள்கின்றன.
தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் 100க்கும் குறைவான இடங்களையே பெற்றுள்ளது.
1984க்கு பிறகு காங்கிரஸ் ஒருமுறைகூட 250க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்லவில்லை.
தனது தோல்வியை காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 99 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன; 100க்கு 99 பெறவில்லை; 543க்கே 99 பெற்றுள்ளது.
தோல்வி பெறுவதில் காங்கிரஸ் உலக சாதனை படைத்து வருகிறது.
பாஜக-காங்கிரஸ் நேருக்கு நேர் போட்டியிட்ட தொகுதிகளில் காங்கிரஸின் வெற்றி விழுக்காடு 26%தான்-மக்களவையில் பிரதமர் மோடி உரை