2019ல் பாஜக : 303 காங் : 55
பிரதான எதிர்கட்சி கிடையாது.

கடந்த 10 வருடங்களில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி அந்தஸ்திற்கு தேவையான இடங்களில் எந்த கட்சியும் வெற்றி பெறவில்லை. எதிர்க்கட்சித் தலைவரே இல்லாமல் பாராளுமன்றத்தில் இஷ்டம் போல் ஆடியது.

எந்த அளவுக்கு என்றால் சுதந்திர இந்தியாவில் 144 MPகளை தகுதி நீக்கம் செய்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் சட்டங்களை நிறைவேற்றியது.

துணை சபாநாயகர் இல்லாமல் 5 ஆண்டுகள் கடத்தியது என்று தன் விருப்பத்திற்கு ஆட்சி செய்தார்கள் ஆனால் இப்போ

2024 ல் பாஜக : 240 காங்கிரஸ் : 100 இப்ப காங் பிரதான எதிர்க்கட்சி பாஜகவோ மைனாரிட்டி அரசு.

நினைத்தது போல் சட்டம் இயற்ற இயலாது..

சோனியா காந்தி எதிர்கட்சி தலைவராக கேபினட் அமைச்சருக்கு உரிய அந்தஸ்து அவருக்கு வழங்கப்பட வேண்டும்.

எதிர்கட்சித் தலைவர் மனு கொடுத்தால் பிரதமரே நேரடியாக பாராளுமன்றம் வந்து பதிலளிக்க வேண்டும், பாராளுமன்ற கூட்டம் நடக்கும் போது ஊர் சுற்ற முடியாது. ஓடி ஒழிய முடியாது.
கேள்வி நேரம் எனப்படும் பூஜ்ய அவரில் பாராளுமன்றத்தில் இருந்தாக வேண்டும்…