தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்பாட்டம், உண்ணா விரதம் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டா.டொமினிக் தலைமையில் தாம்பரம் சண்முகம் சாலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் 1.6.2009 தேதிக்கு பின் சேர்ந்த பட்டதாரி ஆசிரியருக்கும் முன் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் தற்போது 15 ஆயிரம் வரை ஊதிய விகிதம் காணப்படுகிறது. ஒரே வேலையில் இதுபோல் விகிதாசாரம் அதிகமாக உள்ளதை அரசு கலைந்து முறன்பாடுகளை களையவேண்டும்.

சி.பி.எஸ் எனும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை திரும்ப பெற்று பழயை ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.

மாணவர்கள் நலன் கருதி 11ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்திட வேண்டும். ஆசிரியர் பணிபாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினரகள். பின்னர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர் நிறைவேற்றிடவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.