குரோம்பேட்டை புருஷோத்தம நகரில் ஸ்ரீ விஜய கணபதி ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் 23 முதல் 25ஆம் தேதி வரை 3 நாட்கள் மகாகணபதி மூல மந்திர சதூர் லட்ச ஜப ஹோம பெருவிழா நடைபெற்றது. இதற்காக பிரமாண்டமான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த யாகத்தில் 8 ஆச்சார்யார்களை கொண்டு 1008 மோதகத்தால் யாகம் செய்தால், வேண்டிய வரம் கிடைக்கும். எனவே ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு லட்சம் ஜெபமும் பத்தாயிரம் ஆவர்த்தி ஹோமமும் நடைபெற்றது. மூன்று நாட்களும் யாக பூஜையும் மங்கள இசை மற்றும் வேத பாராயணமும் நடைபெற்றன. கடைசி நாளான இன்று மகாதீப ஆராதனை முடிந்ததும் பகல் ஒரு மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. திரளான பொதுமக்கள் யாகத்தில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ரூபாய் 9 லட்சம் செலவில் இந்த பிரம்மாண்ட யாகம் நடத்தப்பட்டுள்ளது. யாகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சிவக்குமார் சிவாச்சாரியார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.