நிதி ஆயோக்கின் 10-வது நிர்வாக குழு கூட்டத்தை டெல்லியில் பிரதமர் தலைமையில் வரும் 24-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கும் இதற்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் அவர் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த சூழலில், இந்த ஆண்டுக்கான கூட்டத்தில் முதல்வர் பங்கேற்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் பங்கேற்க உள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழகத்துக்கான நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துவார் என தெரிகிறது.