தேவையான பொருட்கள்: பூசணிக்காய் -1/4 கிலோ, தேங்காய் துருவல் -3 ஸ்பூன், பச்சை மிளகாய்4, சீரகம் -1 ஸ்பூன், கடலைபருப்பு -1 ஸ்பூன், அரிசி1 ஸ்பூன், மோர்2 கப், மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன், கடுகு -1/2 ஸ்பூன், உளுந்தம்பருப்பு -1/2 ஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு, மல்லிதழை -சிறிதளவு, உப்பு -தேவையான அளவு, எண்ணெய் -தேவையான அளவு, பெருங்காயம் -சிட்டிகை, மோர்மிளகாய் -2 செய்முறை: கடலைபருப்பு, அரிசி 2 மணிநேரம் இரண்டையும் ஒன்றாக ஊறவைத்து அரைத்து வைக்கவும். தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் நன்றாக அரைத்து கொள்ளவும். பூசணிக்காயை வேகவைத்து கொள்ளவும். பின் மோரில் பூசணிக்காய், அரைத்த மசாலா,மஞ்சள்தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து தயார் செய்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, மோர்மிளகாய்,தாளித்து மோர்கரைசலை அதில் சேர்க்கவும். நன்கு நுரை கூடியதும் மல்லிதழை தூவி இறக்கவும்.