கடல் தண்ணீரில், மழை உச்சி, வயக்காடு சகதி என மாணவ மாணவியர்களுக்கு கோடை கால கராத்தே பயிற்சி

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கத்தில் பெருமாள் கராத்தே அகடாமியில் மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு கராத்தே பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இந்த பயிற்சி முகாமில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக மலை ஏறுதல், கடல் தண்ணீர் பயிற்சி, வயக்காட்டு சகதியில் கிக்ஸ் பயிற்சி என பல வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் சார்பாக கலந்து கொண்ட மாணவர்களுக்கு பயிற்சியாளர்கள் அல்தா ஆலம், பெருமாள் ஆகியோர் சுமார் ஏழு நாட்களாக கடும் பயிற்சி அளித்தனர்.

அதனை தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கைகளால் செங்கல், ஓடு உடைத்தல் உள்ளிட்ட தேர்வு மற்றும் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.

இதில் தேர்வடைந்த மாணவர்கள் பிளாக் பெல்ட் பெற்றுள்ளனர்..

அதனை தொடர்ந்து மூத்த கராத்தே பயிற்சியாளர் ரென்சி பி.பெருமாள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பிளாக் பெல்ட் வழங்கி கவுரவித்தார்.

கோடை காலத்தில் தற்காப்பு கலையை கற்றது சான்றிதழ் பெற்றது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.