பல்லாவரம் அருகே வீட்டில் வெளியே நிறுத்தி வைக்கப்பட இருந்த சொகுசு கார் தீப்பற்றி எரிந்து சேதம் காரணம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலை அருகே உள்ள சூர்யா ஆவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் வயது(29) இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் சதீஷின் கார் பழுதாகியதால் சென்னையில் உள்ள கார் பழுதுபார்க்கும் கடைக்கு கொண்டு சென்று பழுது பார்த்து விட்டு மீண்டும் அவரது வீட்டின் வெளியே நிறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் இருந்து திடீரென புகை வந்த சிறிது நேரத்தில் தீப்பிடித்து மள மளவென எரிய தொடங்கியது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் தீயை அணைக்க முயற்சித்தும் தீயை அணைக்க முடியாததால் தாம்பரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றிய தீயை அனைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்தது.

இது குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, காரில்  மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.