
சென்னை : வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம், சென்னை உட்பட 10 மா வட்டங்களில், ஜூலை 1ம் தேதி முதல் சோதனை ரீதியாக துவங்குகிறது மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி கார்டுதாரர்களின் வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் திட்டத்தை துவக்க, அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டம் சோதனை ரீதியாக, வரும் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, நீலகிரி, கடலுார் ஆகிய மாவட்டங்களில் துவங்க உள்ளது.
முதற்கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.