
தேவையானபொருட்கள்: வறுத்து அரைக்க: கட்டி பெருங்காயம் -1 துண்டு, காய்ந்த மிளகாய் -5, துவரம் பருப்பு -1/2டீஸ்பூன், தனியா 2 டீஸ்பூன், சோம்பு -1 டீஸ்பூன், தேங்காய் துருவல் -1 கைப்பிடி குழம்பு செய்ய: வாழைக்காய் -1, எண்ணெய் -2 டீஸ்பூன், கடுகு -1/2 டீஸ்பூன், சீரகம் -1/2 டீஸ்பூன், வெங்காயம்- 1, தக்காளி -1, பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன், மஞ்சள் -1/4 டீஸ்பூன், இஞ்சி -1 துண்டு, பூண்டு -4 பற்கள், உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வறுத்து அரைக்க தயார் செய்துகொள்ளுங்கள். அதற்கு தேங்காய் துருவல் தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். அரைக்கும்போது தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளியுங்கள். பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அதோடு நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். கண்ணாடி பதம் வந்ததும் தக்காளி சேர்த்து வதக்குங்கள். பின் வாழைக்காய் துண்டுகளை சேர்த்து கிளறி வேக வையுங்கள். கொஞ்சம் வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் உப்பு சேர்த்து கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்து கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் வாழைக்காய் கிரேவி தயார்.