உன்னைத்தேடி’, ‘ஆனந்த பூங்காற்றே’, ‘வெற்றிக் கொடிகட்டு’, ‘ஐயா’, ‘சந்திரமுகி’ போன்ற பல படங் களில் நடித்தவர், மாளவிகா. ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் ‘வாளமீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல் யாணம்…’ என்ற குத்துப்பாடலுக்கு போட்ட கலக்கல் ஆட்டம், பெரியளவில் இவரை பிரபலப்படுத்தியது.

2007-ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை ‘திருமணம் செய்துகொண்ட மாளவிகா, அதன்பிறகு அவ்வப்போது படங்களில் சிறப்பு தோற்றங்களில் தலைகாட்டி வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக வலம் வரும் மாளவிகா, அவ் வப்போது உடற்பயிற்சி செய்வது, நண்பர்களுடன் விளையாடுவது போன்ற வீடியோக்களை வெளி யிட்டு கவனம் ஈர்த்து வருகிறார். இதற்கிடையில் வெளிநாட்டில் சுற்றித்திரியும் மாளவிகா, ‘பிகினி’ அணிந்தபடி வெளியிட்டுள்ள கவர்ச்சி படம் இணை யத்தை வைரலாக்கி வருகிறது. ’45 வயதிலும் இப்ப டியா…’ என ரசிகர்கள் ஆச்சரியம் கொள்கிறார்கள். மாளவிகாவின் இந்த கவர்ச்சி, முன்னணி நடிகை கள் சிலரையும் யோசிக்க வைத்துள்ளதாம். எது எப்படியோ ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்