
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியதாவது:- எஸ்ஐஆர் விவகாரத்தில் பாஜக தேவையற்ற வேலையைச் செய்கிறது. மக்களை பதற்றமாகவே வைத்திருக்கப் பார்க்கிறார்கள். அப்போதுதான் செய்கிற தவறு வெளியே தெரியாமல் இருக்கும். ஆவணங்கள் கொடுக்கவில்லை என்றால் பெயர்களை நீக்குவோம் என தேர்தல் ஆணையம் இப்போது தெரிவிக்கிறது.
இரண்டு மாதத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு என்ன ஆவணங்களை கொடுக்க முடியும்? பிஹார் போன்ற வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்க இந்த வேலையைச் செய்கிறார்கள். அப்படி வழங்கும் போது தமிழ்நாடு மற்றுமொரு பிஹாராக மாறிவிடும்… என்றார்.