
வரும் 5ம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் மதுபாட்டில்களை பதுக்கி வைப்பது அல்லது கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.