
பா.ஜ., எம்.பி.,க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது…!
பார்லிமென்டில் , எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள், வரும் 2024 தேர்தலில் அவர்களின் எண்ணிக்கை குறைவதை உறுதி செய்யும். பா.ஜ., எம்.பி.,க்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
பார்லிமென்ட் அத்துமீறல் சம்பவத்தை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள். இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை அரசியலாக்குகின்றன. இதற்கு மறைமுகமாக எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிப்பது கவலையளிக்கிறது. அவர்களின் இந்த செயல், அதற்காக அவர்கள் சொல்லும் சாக்கு போக்கு ஆகியவை கண்டனத்திற்குரியது.
வரும் காலத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கிறார்களா அல்லது இல்லையா என்பது முக்கியம் இல்லை. பா.ஜ., எம்.பி.,க்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். சில மசோதாக்கள் மிகவும் முக்கியமானது. அதன் மீதான விவாதத்தில் பங்கேற்க வேண்டும். எதிர்க்கட்சிகளும் பங்கேற்பது நல்ல விஷயம். ஆனால், நல்ல செயல்கள் அவர்களின் அதர்ஷ்டத்தில் இருக்காது.
நமது அரசை தூக்கி எறிவதே ‛இண்டியா’ கூட்டணியின் குறிக்கோள். ஆனால், நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதே நமது அரசின் குறிக்கோள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.