
இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த ஓய்வுபெற்ற டி.எஸ்.பி உயிரிழப்பு
வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி கோபாலன்(66) கடந்த 3ம் தேதி வண்டலூர் கேளம்பாக்கம் சாலை மேளக்கோட்டையூரில் சாலையை கடந்துள்ளார்.
அப்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் கோபாளனுக்கு முதுகு தண்டு, தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்தது, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்ற நிலையில் கோமா நிலையில் கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் பல்நோக்கு மருத்துவமனையில் திவிர சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில் நினைவு திரும்பாமலேயே உயிர் பிரிந்தது.
இதனையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை முடிந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த அகதீஸ்வரம் கிராமத்தில் அஞ்சலிகாக வைக்கப்படவுள்ளது.