சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர், ஊரப்பாக்கம் ரயில் நிலையம் இடையே நேற்று நள்ளிரவு ஆண் ஒருவர் தலையில் பலத்தகாயங்ககுடன் சடலமாக கிடப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் ரயில்வே தண்டவாளத்தில் இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நடத்திய விசாரனையில் அந்த நபர் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த சரவணன் என்பதும் தண்டவாளத்தை கவனகுறைவாக கடந்த போது எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற விரைவு ரயில் மோதி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.