திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் லட்டு வாங்க இனி வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்.

பிரத்யேக எந்திரத்தில் QR கோடினை ஸ்கேன் செய்து விரைவாக பணம் செலுத்தி லட்டு பெறும் வசதி அறிமுகம்.

டச் ஸ்கீரினுடன் கூடிய பிரத்யேக எந்திரத்தில், தரிசன டிக்கெட் எண், எத்தனை லட்டு தேவை, மொபைல் எண்ணை உள்ளீடாக வழங்க வேண்டும்.

திரையில் தோன்றும் QR கோடினை ஸ்கேன் செய்து, நாம் லட்டுக்கான பணத்தை UPI (அ) பிற டிஜிட்டல் முறை மூலம் பணம் செலுத்தலாம்.

பின்னர், அந்த டோக்கனை கவுண்டரில் வழங்கி லட்டுகளை பெற முடியும்.

தரிசன டிக்கெட் இல்லாமல் திருமலைக்கு வரும் பக்தர்களும் லட்டு பெறும் வசதி அறிமுகம் – திருமலை தேவஸ்தானம்.