
சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. இத்தளம் ஏராளமான வங்கி கணக்குகளை ஒரு செல்போன் செயலி மூலம் இணைக்க அனுமதிக்கிறது.
இந்தியாவில் நடைபெறும் அனைத்து டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகளில் 85 சதவீதம் யுபிஐ கணக்குகள் மூலம் நடைபெறுகிறது. இதில் 49 கோடியே 10 லட்சம் பேரும், 6 கோடியே 50 லட்சம் வணிகர்களும், 675 வங்கிகளும் ஒரே தளத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த யுபிஐ முறைக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகம் முழுவதுமாக நடைபெறும் டிஜிட்டல் பணம் செலுத்துதலில் யுபிஐ 50 சதவீதம் உள்ளது.