மேகதாதுவில் அணை கட்டுவோம் என கூறிய கர்நாடக அமைச்சருடன் இணைந்து பிரசாரம் செய்கிறார் ஸ்டாலின்; விவசாயிகளின் விரோதியாக ஸ்டாலின் உள்ளார்.

தேர்தல் பரப்புரை தொடங்கியதில் இருந்து என்னைப் பற்றி விமர்சனம் செய்து வருகிறார் ஸ்டாலின். பாஜகவுக்கு அதிமுக அடிமை என பேசி வருகிறார்; எங்கள் கட்சி தொண்டன் கூட யாருக்கும் அடிமை இல்லை.

இஸ்லாமியர்களுக்கும் ஏகப்பட்ட திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். இஸ்லாமிய மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறிக்கொண்டு தான் இருக்கும். கொள்கை நிலையானது.

கண்ணை இமை காப்பது போல சிறுபான்மை மக்களை நாங்கள் காப்போம். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக.

– நாகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு