மேற்கு மாம்பலத்தில் மாபெரும் கொலு விற்பனை கண்காட்சி
மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையில் பாணிகிரகா மண்டபத்தில் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்த கைவினைக் கலைஞர் ஜனாதிபதி கைகளால் தேசிய விருது பெற்ற வில்லியனூர் சேகர் தலைமையில் புதுச்சேரி கைவினை கலைஞர்கள் சார்பில் நடத்தப் படும் கண்காட்சி கடந்த 18/9 /25 முதல் அக்டோபர் 2 தேதி வரை இந்த ஆண்டும் கொலு விற்பனை கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கொலு விற்பனை கண்காட்சியை கொலு நந்தினி மற்றும் குரோம்பேட்டையை சேர்ந்த சாந்தி முருகேசன், சன்மதி ஸ்ரீ ரஞ்சன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இது முழுக்க முழுக்க கைவினை கலைஞர்களால் மிகவும் நேர்த்தியாக உயிரோட்டமான கொலு பொம்மைகளை பிரம்மாண்டமாக தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.இதில் ஆளுயர திருப்பதி வெங்கடேச பெருமாள் சிலை மற்றும் உத்தரகோசமங்கை மரகத லிங்கம் ஆகியவை மிகவும் நேர்த்தியாக இருந்தது. நவ திருப்பதி, அஷ்டலட்சுமி, நவக்கிரக நாயகியர், நவ நரசிம்மர், கடவுள் விவசாயம் செய்வது மற்றும் திருமண வீடு,மன்னர் அரச சபை பெண்கள் கிணற்றடியில் குளிப்பது துணி துவைப்பது போன்றவும் பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவது போலவும் அம்மன்கள் உலகப் புகழ் பெற்ற மைசூர் தசரா, குலசை முத்தாரம்மன் மற்றும் காளி ரூபத்திலும் அன்னபூரணி மதுரை மீனாட்சி காமாட்சி என்று பலவகை அம்மன்கள் கொலு பொம்மைகளாக தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேற்படி கண்காட்சியில் ரூ. 50 முதல் 50 ஆயிரம் வரை கொலு பொம்மைகளை விற்பனைக்கு வைத்துள்ளனர் .இந்த கொலு கண்காட்சி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது வீடுகளில் கொலு வைப்பவர்கள் தங்களுக்குத் தேவையான புதிய வரவு மற்றும் வித்தியாசமான கொலு பொம்மைகளை இந்த விற்பனை கண்காட்சியில் கண்டு களித்து வாங்கி செல்லலாம். மேலும் வில்லியனூர் சேகர் அவர்களை 9789061933 மற்றும் சுரேஷ் 90921 10014 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.