
அதிகாலையிலேயே குடித்துவிட்டு அரசு பேருந்தில் தகராறு செய்த பயணி காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து.
இவ்வளவு காலையில் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது போதை என மனக்குமுறலுடன் பேசிய அரசு பேருந்தின் ஓட்டுனர்
கிழக்கு தாம்பரத்திலிருந்து அகரம் தென்பகுதிக்கு ஏற்றப்படும் 31-A பேருந்தில் தினசரி ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அலுவலகத்திற்கு செல்பவர்களும் பயணிக்கின்றனர். இந்நிலையில் தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலையில் தங்கு தடை இன்றி கிடைக்கும் மதுபானங்களால் கூலி தொழிலாளிகள் பலர் காலையிலேயே மது அருந்தி தங்களுடைய வாழ்க்கையை நாசமக்கி வருகின்றனர்.
அந்த வகையில் கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த தாமஸ் செல்வராஜ் என்ற இளைஞர் காலையில் தலைமுட்ட குடித்துவிட்டு 31-A பேருந்தில் ஏரி பயணித்துள்ளார்.
பள்ளி கல்லூரி மாணவர்களும் அலுவலகம் செல்வோர் பலரை ஏற்றி சொல்லும் பிசியான ரூட் 31-A.
கிழக்கு தாம்பரத்தில் போதை தலைக்கு ஏரிய நிலையில் பேருந்தில் ஏரிய தாமஸ் செல்வராஜ் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார்.
உள்ளே வந்து நில்லுங்கள் என பல முறை ஓட்டுனர் கூறிய நிலையில் ஓட்டுனரிடம் தகராறு செய்யுள்ளார் குடி கார ஆசாமி தாமஸ் செல்வராஜ்.
அகரம் தென் பகுதியை நோக்கி பேருந்து சென்ற போது தாமஸ் செல்வராஜ் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்துள்ளார்.
அப்பகுது தாம்பரம் வேளச்சேரி சாலையில் பேருந்து பயணித்த போது சேலையூர் காவல் நிலையத்தில் அரசு பேருந்து நிறுத்தப்பட்டது.
பஸ்ஸில் இருந்து கீழே இறங்கிய ஓட்டுனர் சார் பாருங்க சார் குடிச்சிட்டு படிக்கட்டில் நின்னுட்டு வரா கேட்ட ஏடாகுடமா பேசுரான் என குமுரளுடன் கூறினார்.
பின்பு சேலையூர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்கள் சிலர் பேருந்தின் அருகே சென்ற போது பம்பிய போதை ஆசாமி நான் என்ன சார் பன்ன என்ன ஏன் கூப்பிடுறீங்க என்று பாவக்குரளில் பேசி பேருந்தை விட்டு கீழே இறங்கி காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.
காவலர்கள் விசாரணையில் மூக்கு முட்ட குடித்த நபர் கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், பெயிண்டர் வேலை செய்யும் கூழி தொழிலாளர் என்பது தெரிய வந்தது.
பின்பு அவரை காவல் துறையினர் கண்டித்து வீட்டிற்கு அனுப்பு வைத்தனர்.
போதை கலாச்சாரத்தில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு விருது வாங்கும் அளவிற்கு போதை பழக்கம் உச்சத்தை எட்டியுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.