முதல் வகுப்பு சிறையில்
நடிகர்.ஸ்ரீகாந்திற்கு வழங்கப்படும் வசதிகள்!

கொக்கைன் போதை வழக்கில், கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு முதல் வகுப்பு சிறைக்கு அனுமதி அளித்து சென்னை எழும்பூர் 14-ஆவது பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
புழல் சிறையில்
அடைக்கப்பட்டுள்ள நடிகர்.ஸ்ரீகாந்திற்கு கட்டில், தலையணை,கூடுதல் விளக்குகள்,படிக்க செய்தித்தாள்கள்,மருத்துவ சிகிச்சை,மருத்துவரின் பரிந்துரைப்படி உணவு வழங்கப்படும்.
மேலும்,அவருடைய உறவினர்கள் வாரம் இரு நாட்கள் போய் பார்க்கலாம். சிறையில் இருப்போருக்கு பழங்கள், ஸ்னாக்ஸ்களை வழங்கலாம். முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் கோழி இறைச்சி உணவு வழங்கப்படும்.
முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு
ஒரு நாள் உணவுக்கு
ரூ.146.44 ஒதுக்கப்பட்டது. தற்போது அது 207.89 ரூபாயாக செலவிடப்படுகிறது!
ஜூலை.7-ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டுள்ளது.