
இளையராஜாவின் பேரனும் கார்த்திக் ராஜாவின் மகனுமான யத்தீஸ்வர், தான் இசையமைத்துப் பாடிய ‘ஓம் நமசிவாய என்னும் பாடலை திருவண்ணாமலையில் உள்ள ரமணர் ஆசிரமத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், சினிமாவில் இசையமைக்க விரும்புவதாகவும், நல்ல வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் யத்தீஸ்வர் பேட்டியில் கூறியுள்ளார்.