தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் என்.மாரப்பன், பொருளாளர் கே.முரளிபாபு, செயலாளர் பி.கார்த்திகேயன், மண்டல செயலாளர்கள் எஸ்.பாலமுருகன், டி.பழனிச்சாமி, கே.ரமேஷ், நாமக்கல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.அய்யாவு, வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு துணைத் தலைவர் எஸ்.கே.ஆடம், அம்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஏ.லட்சுமி ராஜ்ரத்தினம், விழுப்புரம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எம்.காளிதாஸ் ஆகியோர் சந்தித்து, ஒன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து ஒன்றிய உள்துறை அமைச்சர் கடிதம் எழுதியமைக்காக நன்றி தெரிவித்தும், இப்புதிய சட்டங்களை இரத்து செய்ய வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்துமாறும் கேட்டுக் கொண்டனர்.