
டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் நடுவானில் குலுங்கியுள்ளது.
இதனால், விமான பயணிகள் பீதியின் உச்சத்தில் இருந்துள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக விமானம் சேதமடைந்த நிலையில் விமானியின் சாதுர்யத்தால், 227 பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) டெரெக் ஓ‘பிரையன், சாகரிகா கோஸ், நதிமுல் ஹக், மம்தா தாக்கூர் மற்றும் மனாஸ் பூயான் ஆகியோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது